மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் நடந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,
பறிபோன பேச்சு சுதந்திரம்
நாட்டின் விடுதலைக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் துளி அளவும் சம்பந்தமில்லை. ஆனால், நாட்டின் காவலாளி என மோடி சொல்லிக்கொள்கிறார். தனி மனிதனுக்கு பாதுகாப்பில்லாத நிலையே உள்ளது. தனியாக வெளியில் செல்ல அஞ்சும் நிலை உள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள் தனியாக வெளியில் நடமாட முடியவில்லை. முகிலன் காணாமல் போய் பல நாட்கள் ஆகி இன்னமும் அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆளும் கட்சியும்... வருமானவரிச் சோதனையும்...
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், "2004இல் எவ்வாறு 40-க்கு 40 என திமுக கூட்டணி வெற்றி பெற்றதோ, அதேபோல் தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறும்.
அதேபோல இடைத்தேர்தல்களிலும் வெற்றுபெறுவோம். எதிரணியினர் வெற்றிபெற்று விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பழி வாங்குகின்றது.
மோடி ஒரு பொய்யர்! உண்மை பேசாத கட்சி பாஜக!
உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவை பாஜகவின் சாதனை என சொல்லப்பட்டது. ஆனால் சாதனை என்றால் தேர்தலில் பாஜகவினர் ஏன் அதை சொல்லவில்லை. பாஜக எப்போதும் உண்மையே பேசாத கட்சி. ஏனென்றால் அதனால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகளவில் நலிவடைந்து உள்ளன. இதன்காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர். ஆனால் நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாக மோடி வாய் கூசாமல் பொய் பேசுகிறாகிறார்" என குற்றம்சாட்டினார்.