ETV Bharat / state

மண்ணுக்குள் 88 சவரன்.. கொள்ளை பணத்தில் 4 கோடிக்கு நூற்பாலை.. தேனி கும்பல் சிக்கியது எப்படி? - THENI ROBBERY GANG

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வந்த கும்பல், திருடிய பணத்தில் நான்கு கோடிக்கு நூற்பாலையை விலைக்கு வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சம்பவம் தேனியை அதிர வைத்துள்ளது.

கைதான அம்சராஜன் மற்றும் மூர்த்தி
கைதான அம்சராஜன் மற்றும் மூர்த்தி (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2024, 2:29 PM IST

தேனி: தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆட்கள் இல்லாத ஐந்து வீடுகளில் பணம், நகை உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன. அதேபோல் 2024 ஆம் ஆண்டும் நான்கு வீடுகளில் சுமார் 88 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவை திருடப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். திருட்டு சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமரா, கைரேகை போன்ற எதுவும் சிக்காததால் குற்றவாளியை பிடிக்க முடியாமல் போனது. இதனால் பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

கொள்ளையர்களை நெருங்கிய தனிப்படை

அப்போது மதுரை மாவட்டம் கருப்பாயூரணி சேர்ந்த மூர்த்தி (20) மற்றும் பெரியகுளத்தைச் சேர்ந்த அம்சராஜன் (31) ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இருவரையும் ஏற்கனவே கோயம்புத்தூர் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்திருந்த நிலையில், தேனியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மூர்த்தி மற்றும் அம்சராஜனை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அவர்களை காவலில் எடுத்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை விசாரித்தனர்.

இருவரையும் விசாரணை செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின... அதாவது, மூர்த்தி, அம்சராஜன் மற்றும் இவர்களது நண்பர்களான சுரேஷ் மற்றும் அருண்குமார் ஆகியோருடன் இணைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆட்கள் இல்லாத வீடுகளில் புகுந்தும், ஆட்கள் உள்ள வீடுகளில் அவர்களை கட்டி வைத்தும் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து வந்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மூர்த்தி தனது மனைவி அனிதா பிரியா, தாய் சீனித்தாய், சகோதரி லட்சுமி மற்றும் அவரின் கணவர் மோகன் ஆகியோரிடம் கொடுத்து வைத்துள்ளார். மேலும், திருடிய பணத்தில் ராஜபாளையத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு விலைக்கு வந்த பழைய நூற்பாலையை விலைக்கு வாங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், மூர்த்தி மற்றும் அவரது மனைவி திருடிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததுடன், திருட்டு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தனது மனைவி அனிதா பிரியாவை வழக்கறிஞராகவும் படிக்க வைத்துள்ளார்.

நகைகள் என்னானது?

இந்நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி, தேனி அருகே உள்ள மாரியம்மன்கோயில்பட்டி பகுதியில் முட்புதர்களில் பாலித்தீன் கவர்களால் சுற்றி மண்ணுக்குள் புதைத்து வைத்து இருந்தனர். அதற்கு மறுநாளே கோயம்புத்தூர் போலீசார் திருட்டு வழக்கில் மூர்த்தி, அம்சராஜன், சுரேஷ் மற்றும் அருண்குமாரை கைது செய்ததால், புதைத்து வைத்திருந்த தங்க கட்டிகளை எடுக்க முடியாமலே போனதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து தேனி வருவாய்த் துறையினர் முன்னிலையில் பழனிசெட்டிபட்டி போலீசார் மண்ணில் புதைத்து வைத்திருந்த 88 சவரன் கொண்ட 49 லட்சம் மதிப்புள்ள 6 தங்கக் கட்டிகளை மீட்டனர்.

மேலும், திருட்டு குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக மூர்த்தியின் மனைவி அனிதா பிரியா, தாய் சீனித்தாய், சகோதரி லட்சுமி மற்றும் அவரின் கணவர் மோகன் ஆகியோரை ராஜபாளையம் போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம் என தமிழகம் முழுவதும் 30 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடிய இவர்கள் மீது சுமார் 90 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை விசாரணை செய்து அவர்களிடம் இருந்து 88 பவுன் நகைகளை மீட்ட பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன் மற்றும் போலீசாரை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.