ETV Bharat / state

எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - SANGITA KALANIDHI AWARD

2024-ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி , சென்னை உயர் நீதிமன்றம்
எம்.எஸ்.சுப்புலட்சுமி , சென்னை உயர் நீதிமன்றம் (Photo Credits - getty images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2024, 2:17 PM IST

சென்னை: 2024-ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரின்றி விருது வழங்க தடை இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 2004-ல் எனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு, அவரது நினைவை போற்றும் வகையில் 2005 ஆம் ஆண்டு முதல் மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது என்ற பெயரில், ரூ.1 லட்சம் ரொக்க விருதை வழங்கி வருகிறது.

மியூசிக் அகாடமியின் வருடாந்திர இசை கச்சேரி சீசனில், ஒவ்வொரு ஆண்டும் ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்கப்படுகிறது. அதன்படி, வரும் டிசம்பரில் 98 வது ஆண்டு விழாவில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களை பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்து வருகிறார்.கர்நாடக இசை உலகில் தன்னம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய ஒருவருக்கு எனது பாட்டியின் பெயரில் விருது அளித்து கெளரவிப்பது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருதை வழங்க தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு; மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்!

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பதிலளித்த மியூசிக் அகாடமி, “விருது பெறுபவரை தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. 2005-ஆம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழ் குழுமம் தான் விருது வழங்கி வருகிறது. இதற்கு மறைந்த பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 2024-ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என தடை விதித்துள்ளார். அதே சமயம், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என இடைக்கால உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.