ETV Bharat / state

"நவக்கிரக சுற்றுலா பேருந்தால் வாழ்வாதாரம் பாதிப்பு" - தனியார் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம்! - NAVAGRAHA SPECIAL BUS RUN

நவக்கிரக சுற்றுலா பேருந்தால் தனியார் வேன், டாக்ஸி ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிக் கடன் திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2024, 2:06 PM IST

தஞ்சாவூர்: நவக்கிரக சுற்றுலா பேருந்தால் தனியார் வேன், டாக்ஸி ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிக் கடன் திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு கும்பகோணம் வட்டார அனைத்து சுற்றுலா வேன், டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட நபர்கள் இன்று (நவ.19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தலா 2 பேருந்துகள் வாயிலாக அரசு போக்குவரத்துக் கழகத்தால் நவக்கிரக சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் முன்பதிவு செய்யும் பக்தர்கள் இந்த சுற்றுலாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அரசின் சார்பில் இந்த சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் வேன், டாக்சி ஓட்டுநர்கள் நவக்கிரக சுற்றுலா என்ற பெயரில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றனர். இப்போது அரசே இந்த சுற்றுலா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால், கடந்த சில மாதங்களாக தனியார் சுற்றுலா வாகன சேவைகள் கடந்த சில மாதங்களாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிக் கடன் திரும்ப செலுத்த முடியாமல் அவதியுற்றுள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மாநில பொருளாளர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

எனவே தனியார் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், அதே முன்பதிவை தனியார் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயன் பெறும் வகையிலும், தனியார் வாகனங்களை பயன்படுத்தும் வகையிலும் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என 300க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் இணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: "அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்கும் அனுமதி மாமதுரையின் வளங்களையும், வரலாற்றையும் அழிக்கும் முயற்சி" - சு.வெங்கடேசன் கண்டனம்!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மாநில பொருளாளர் பி.பார்த்தசாரதி, "பேருந்திற்கு ஆன்லைனில் பதிவு செய்து பயணிகளை ஏற்றிச் செல்வது போல, சுற்றுலா வாகனங்களையும் இணைத்துக் கொண்டு, எங்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தமிழக அரசும், சுற்றுலாத் துறையும் செயல்பட வேண்டும். இதன் மூலம் மக்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களும் பயன்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்ற அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.