லண்டன்: இந்தியா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் புத்தாண்டில் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடியை இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் சந்தித்துப் பேசினார். இது குறித்து இங்கிலாந்தில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுடன் புதிய உத்திப்பூர்வமான கூட்டாண்மையை இங்கிலாந்து விரும்புகிறது. பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் பஸ்பரம் ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்தும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் வேகமான வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்ற வகையில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து கடமைப் பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட உள்ள ஒப்பந்தம் இங்கிலாந்தின் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும். இந்த முன்னெடுப்பின் மூலம் வாய்ப்பும், வளர்ச்சியும் அதிகரிக்கும்," என்று கூறப்பட்டுள்ளது.
A very productive meeting with Prime Minister @NarendraModi.
— Keir Starmer (@Keir_Starmer) November 19, 2024
Yesterday we announced plans to relaunch UK-India trade talks.
A new trade deal will support jobs and prosperity in the UK – and represent a step forward in our mission to deliver growth and opportunity across the… pic.twitter.com/8RHUshApdu
இதையும் படிங்க : கூகுள் மேப்பை நம்பியதால் சேற்றில் சிக்கிய ஐயப்ப பக்தர் : பத்திரமாக மீட்ட போலீசார்!
இங்கிலாந்து பிரதமர் உடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் ஆக்கப்பூர்வமான சந்திப்பாக இருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை இங்கிலாந்துடன் ஒருங்கிணைந்த உத்திப்பூர்வமான கூட்டாண்மை என்பது பெரும் முன்னுரிமை கொண்டதாகும். எதிர் வரும் ஆண்டுகளில் தொழில்நுட்பம், பசுமை எரிபொருள், பாதுகாப்பு, புதுமை படைத்தல் ஆகியவற்றில் நாங்கள் இணைந்து செயல்படுவதற்கு ஆர்வத்துடன் உள்ளோம். வலுவான வர்த்தக ஒத்துழைப்புடன் இருநாடுகளுக்கு இடையேயான கலாச்சார ரீதியான ஒருங்கிணைப்பையும் விரும்புகின்றோம்," என்று கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியா-இங்கிலாந்து இடையே ஒருங்கிணைந்த உத்திப்பூர்வ கூட்டாண்மை குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்தனர். நடுநிலையான பரஸ்பரம் பயன் தரக்கூடிய கட்டற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்," என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த இங்கிலாந்தின் வர்த்தகத்துறை அமைச்சர் ஜொனாதன் ரெனால்ட்ஸ், உலகில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இங்கிலாந்தைப் பொறுத்தவரை இந்தியா முக்கியமான வணிக கூட்டாண்மை நாடாகும். இருநாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் நல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம்," என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்