இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைளைக் கண்டறியும் நோக்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக தொடங்கி நடந்துவருகிறது. இதன் ஒருபகுதியாக அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.
இதில் இன்று கைப்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இப்போட்டிகளில் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளிலிருந்து 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஆண், பெண் என இருபாலருக்கும் போட்டிகள் தனித்தனியாக நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: உயரம் தாண்டும் விரிப்பை சரி செய்ய கோரிக்கை