ETV Bharat / state

நீர்வழித்தடங்களை ஆக்கிரமிக்கும் சிமெண்ட் ஆலைகள் - மத்திய நீர் வாரிய விஞ்ஞானியிடம் விவசாயிகள் புகார்

அரியலூர்: நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள சிமெண்ட் ஆலைகள் குறித்து மத்திய நீர் வாரிய விஞ்ஞானி ராஜ்கிஷோர் முகந்தியிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

farmers
farmers
author img

By

Published : Mar 4, 2020, 9:07 PM IST

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய கூட்ட அரங்கில் மத்திய அரசின் நிலத்தடி நீர்வள வாரியம் மூலம் கிராம மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிலத்தடி நீர் வள ஆய்வு விஞ்ஞானி ராஜ்கிஷோர் முகந்தி நிலத்தடி நீர் சேமிப்பு குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

அப்போது பேசிய அவர், செந்துறை பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் சுகாதாரமில்லாமல் மிக மோசமான நிலையில் கிடக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றி சுண்ணாம்பு கல் சுரங்கங்கள் இருப்பதால் நிலத்தடி நீருக்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளது. எனவே மக்கள் அனைவரும் தண்ணீரை காய்ச்சி குடிப்பது நல்லது என்று அறிவுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த விவசாயிகள், செந்துறை பெரிய ஏரிக்கு வரும் முக்கிய நீர்வரத்து வாரிகளை, இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் சுண்ணாம்பு கல் சுரங்கங்கள் ஆக்கிரமித்து மண்ணை கொட்டி வைத்துள்ளனர். வாரிகளில் பாதை அமைத்து லாரிகளை இயக்குவதால் ஏரிக்கு மழைநீர் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனை தட்டி கேட்க முடியாமல் மிகவும் வேதனைப்படுகிறோம் என்று விஞ்ஞானி ராஜ்கிஷோர் முகந்தியிடம் தெரிவித்தனர்.

விஞ்ஞானியிடம் குறை கூறி அழும் விவசாயிகள்

மக்களின் புகாரைத் தொடர்ந்து விஞ்ஞானி ராஜ்கிஷோர் முகந்தி சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், சுண்ணாம்பு கல் சுரங்கம் பகுதியில் உள்ள ஓடையில் மண்ணை குவித்து வைத்திருந்ததை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து மத்திய அரசிடமும் மாவட்ட நீதித்துறையிலும் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதாக உறுதி அளித்து சென்றார்.

இதையும் படிங்க: சிஏஏ நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது - திருமாவளவன் எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.