அரியலூர் சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகேயுள்ள வெள்ளாளர் தெருவில் பாரத் பர்னிச்சர் கடையின் மேல்மாடியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் ஒன்று கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்நிலையில் அரியலூர் சுற்றியுள்ள பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது.
இதனைத் தொடர்ந்து பலத்த காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் செல்போன் கோபுரம் முறிந்து அருகில் உள்ள வீட்டின் மேல் விழுந்தது. இதில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. செல்போன் டவர் முறிந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பது பழமொழிக்கு ஏற்ப அரியலூரில் ஆடி காற்றில் செல்போன் டவர் முறிந்தது புதுமொழியாகும்.