அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் கிராமத்தில் வடக்குத் தெரு வழியாக பெரியபாளையம் செல்லக்கூடிய சாலையில் உள்ள அரசு கொண்டான் ஓடையில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் ஜெயங்கொண்டம் நோக்கி செல்கிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் நீரானது அரசு கொண்டான் ஓடை வழியாக மீண்டும் கொள்ளிடத்தில் கலக்கிறது. இதனால் மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
ஆகையால் உடனடியாக குழாயின் உடைப்பை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வண்ணம் வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.