அரியலூர் மாவட்டத்தில் உள்ள 21 ஊராட்சிகளிலும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தந்த ஊராட்சித் தலைவர்களிடம் காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கேட்டுக்கொண்டார். அதன்படி தாமரைக்குளம் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த நிகழ்விற்கு திருச்சி சரக காவல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், "ஒட்டுமொத்த மக்களும் ஒண்றினைந்து தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டிலேயே முன்னோடி ஊராட்சியாக தாமரைக்குளம் விளங்குகிறது" என்றார்.
மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் அனைவரும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்றனர். இந்த விழிப்புணர்வுப் பேரணியை தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்
இதையும் படிங்க: