அரியலூர்: அரியலூர் அருகே பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்குத் தெரியவந்த நிலையில், மாணவியின் பெற்றோர், கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையறிந்து அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மதன் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சம்பவம் உண்மை எனத் தெரியவந்தது. மேலும் இதே ஆசிரியர் கடந்த மாதம் மற்றொரு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.
இது குறித்து மாணவி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் குற்றத்தை மறைக்க முயற்சி செய்து, மாணவியைச் சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது. பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரை முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட நிலையில், தற்போது குற்றத்தை மறைக்க முயன்ற பள்ளி தலைமை ஆசிரியரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: லாரியில் கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல்