ETV Bharat / state

சைபர் கிரைம் குற்றங்களைத் தவிர்க்க சில டிப்ஸ்... அரியலூர் காவல் துறையின் கலக்கல் பிரசாரம்! - சைபர் கிரைம் விழிப்புணர்வு

அரியலூர் மாவட்ட காவல் துறையினர், ஆன்லைன் மூலம் நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்களைத் தவிர்க்க, ஆன்லைன் மூலமாகவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 15, 2023, 4:35 PM IST

அரியலூர்: சைபர் கிரைம் குற்றங்களைத் தவிர்க்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ்கள் குறித்து அரியலூர் மாவட்ட காவல் துறை இணையதளங்கள் வாயிலாக கலக்கல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பிரசாரம் பொதுமக்களால் வெகுவாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இணையதளங்கள் வழியாக மோசடிகள் நடப்பது நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றன. இணையதள குற்றங்கள் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, தினமும் வீடியோ வாயிலாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இருந்தபோதும் புது புது வகையில் இணையதளங்கள் வழியாக மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில் அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் இணையதள குற்றங்களைத் தவிர்ப்பது எப்படி?, இணையதளங்கள் வாயிலாக எந்த வழியில் மோசடிகள் நடைபெறும், அதிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்று 12 கட்டளைகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை நகரத்தின் முக்கிய இடங்களில் வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் இணையதள குற்றங்களுக்கு இணையதளம் வாயிலாகவே பிரசாரங்களை மேற்கொண்டு அதிரடியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்ட காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு சார்பில் இன்ஸ்டாகிராம், டெலிகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள் வாயிலாக இணையதள குற்றம் என்றால் என்ன? அந்த குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன? மக்கள் அதில் எப்படி விழுந்து ஏமாறுகின்றனர்? அதிலிருந்து தப்பிப்பது எப்படி? புகார் தெரிவிப்பது எப்படி? போன்ற விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. அவைகள்:-

  • 'இணையதளங்கள் வாயிலாக வரும் கடன் செயலிகள் எதையும் எடுக்கக் கூடாது.
  • ஓடிபி எண்களை பகிரக்கூடாது.
  • லோன் தருவதாக யாராவது கூறி பேசினால் அந்த அழைப்புகளை ஏற்க வேண்டாம்.
  • பார்சல் அனுப்பி உள்ளதாக கூறினால் அவற்றை கருத்தில் கொள்ள வேண்டாம்.
  • வீட்டிலிருந்தே வேலை என்று வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம்.
  • பரிசு விழுந்து உள்ளது என்று கூறி யாரேனும் தொகை அனுப்பக் கூறினால் அனுப்ப வேண்டாம்.
  • வங்கி தொடர்பான எந்த தகவல்களையும் யாரிடமும் பகிர வேண்டாம்.
  • ஃபேஸ்புக் போன்றவற்றில் நண்பர்களாகப் பழகி பண உதவி கேட்டால் எடுக்க வேண்டாம்.
  • தங்களுக்கு ஏற்படும் சைபர் கிரைம் தொடர்பான எந்தப் பிரச்னையாக இருந்தாலும் 1930 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்க வேண்டும்'

உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையில் வழக்கறிஞருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.