மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் எல்ஐசியின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைக் கண்டித்து நாடு முழுவதும் எல்ஐசி ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அதன்படி இன்று அரியலூர் எல்ஐசி ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டன. குறிப்பாக தனியாருக்கு பங்குகள் விற்பதால் தனியார் முதலாளிகளின் மட்டுமே லாபம் அடைவார்கள் என கோஷமிடப்பட்டது. மேலும் இதில் ஏராளமான எல்ஐசி ஊழியர்கள், முகவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: எல்ஐசி பங்கு விற்பனை விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம்