அரியலூர் மாவட்டம் செந்துறை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பானை உடைத்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி, கபடி போட்டி, மியூசிக்கல் சேர், கவிதை, பேச்சுப் போட்டி, நடனம் என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன.
இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நபர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
காணும் பொங்கல்
காணும் பொங்கலை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழர் கால புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தில், ஏராளமான பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து பிரகதீஸ்வரரை வழிபட்டும் அருகில் உள்ள பூங்காக்களில் குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடியும் காணும் பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: களைகட்டிய விளையாட்டுப் போட்டிகள்- ஆர்ப்பரித்த மக்கள்