அரியலூர் மாவட்டம், ஈச்சங்காடு பகுதியில் சங்கர் சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கனரக வாகனத்தின் மூலம் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிகொண்டு அறந்தாங்கியில் இறக்குவதற்காக ஓட்டுநர் விமல்ராஜ் ஓட்டிச் சென்றார்.
அப்போது, அரியலூரிலிருந்து ஐயம்பேட்டை நோக்கி வந்துகொண்டிருந்த சிமெண்ட் லாரியுடன் சமத்துவபுரம் அருகே வந்து கொண்டிருந்த விமல்ராஜின் கனரக வாகனம் மோதியது. இதில் காயமடைந்த விமல் ராஜ் சிகிச்சைக்காக அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து கீழப்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.