அரியலூர் மாவட்டம் பள்ளகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு நேற்று வேலை இல்லை என்ற காரணத்தால் காலையில் மது அருந்திவிட்டு ஐயப்பன் ஏரியில் குளித்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து ஏரியில் யாரோ ஒருவர் குளித்து கொண்டிருந்தபோது சிக்கி கொண்டதாக காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினரின் உதவியோடு தேடுதல் பணியில் ஈடுப்பட்டனர்.
நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு காமராஜ் சடலமாக மீட்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் உடல் உடற்கூறாய்விற்காக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அரியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அரியலூர் ஏரி தூர்வாரும் பணி: அரசு தலைமை கொறடா ஆய்வு