ETV Bharat / state

ஒரிஜினல் தளபதிக்கே டஃப் கொடுக்கும் ஒன்றிய தளபதி: பட்டியல் போடும் ஹைடெக் எம்எல்ஏ; பின்னணி என்ன? - udhaiyanithi Stalin

மாதம் முழுவதும் என்ன செய்தேன் என தேதி வாரியாக பட்டியல் போட்டு விளக்கும் அரியலூர் மாவட்ட எம்எல்ஏ, அதற்காக பம்பரமாக சுழலும் உள்ளூர் ஐ.டி விங்க் என இது போன்ற சம்பவம் நிகழ்ந்து வருகிறது.

ariyalur mla Kannan
பட்டியல் போடும் ஹைடெக் எம்எல்ஏ
author img

By

Published : Mar 10, 2023, 2:51 PM IST

அரியலூர்: சட்டப்பேரவைக்கு ஒரு மாதத்தில் எத்தனை நாள் சென்றேன்? நலத்திட்ட உதவிகளை எத்தனை முறை வழங்கி துவக்கி வைத்தேன்? இதர விஷேசங்கள், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது எத்தனை முறை? போன்ற புள்ளி விவரங்களை தேதி வாரியாக பட்டியலிட்டு அதனை இணையம் வாயிலாக அரியலூர் மாவட்ட எம்.எல்.ஏ பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்.

அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகள் மட்டுமே உள்ளன. அரியலூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக சின்னப்பா பணியாற்றி வருகிறார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ-வாக க.சொ.க.கண்ணன் பணியாற்றி வருகிறார். எம்.எல்.ஏ கண்ணனின் தந்தை க.சொ.கணேசனும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ-வாக இருந்து, திமுக தலைவர் கருணாநிதியின் குட் புக்கில் இடம் பெற்றவர்.

கண்ணனின் மாமனார் சின்னப்பனும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ஆக இருந்தவர். படிப்பு முடிந்ததும் அரசியலில் நுழைந்த கண்ணன், கட்சி பதவி, ஊராட்சி ஒன்றிய அளவிலான அரசுப் பதவிகளில் இருந்து வந்தார். மேலும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகியாகவும் இருந்தார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கிய அவர் வெற்றி வாகை சூடினார்.

ஆனால் ஜெயங்கொண்டம் தொகுதியின் ஒரு குறிப்பிட்ட வட்டார பகுதியில் தான் கண்ணனை, யார் என்று மக்களுக்கு தெரியும். இதர பகுதிகளில் அவரை அவ்வளவாக தெரியாது என்ற நிலை அவர் பொறுப்பேற்ற கால கட்டத்தில் இருந்து வந்தது. அந்த குறையை போக்க கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள், உறவினர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் இல்ல விழா நிகழ்ச்சிகள் என ஒன்று விடாமல் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இது போதாது என்று நினைத்த அவர் தற்போது ஹைடெக் முறையில் தன்னைப் பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். இதற்கு அவர் எடுத்த ஆயுதம் சமூக வலைத்தளங்களாகும். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், உள்ளூர் வாட்ஸ் அப் குழு என அனைத்திலும் இணைந்துள்ளார். இந்த குழுக்களில் ஜெயங்கொண்டம் எம்.எல்‌.ஏ ஆகிய எனது இம்மாத பணி விவரங்கள் என்ற தலைப்பில் பதிவுகளை அப்டேட் செய்து வருகிறார்.

மேலும் இந்த மாதம் சட்டப்பேரவைக்கு சென்ற நாட்கள், விடுத்த கோரிக்கைகள், கட்சி நிகழ்ச்சிகள், உறவினர்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகள், அரசு விழாக்கள் போன்ற தலைப்புகளை பதிவு செய்து அதில் நிகழ்ச்சி விவரம், கலந்து கொண்டவர்கள் பெயர், புகைப்படங்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் பதிவு செய்து வருகிறார். நிகழ்ச்சி முடிந்த அரைமணி நேரத்தில் அந்த நிகழ்ச்சி விவரங்கள் குழுக்களில் இடம் பிடித்து விடுகிறது.
ஒரு நாள் கூட விடாமல் இந்த தகவல் பதிவு வேலை தீவிரமாக நடந்து வருகிறது.

இதைப் பார்க்கும் பொதுமக்கள், எம்.எல்‌.ஏ இருக்கும் இடத்தை எளிதாக தெரிந்து கொள்கின்றனர். மேலும் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் அறிந்து கொள்கின்றனர். அந்த காலத்தில் வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், நன்னிலம் நடராஜன், நாகூர் அனிபா போன்ற திமுக முக்கிய பேச்சாளர்கள் தான் கருணாநிதியின் சாதனைகளை மேடை தோறும் முழங்குவார்கள் ஆனால் இந்த ஹைடெக் எம்எல்ஏ கண்ணன், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து, இந்த நாள் வரை செய்த சாதனைகள் என்ன என்று தனியாக ஒரு பட்டியலை போட்டு வருகிறார்.

இவர் தனது பேஸ்புக் கணக்கில் இம்மாத பட்டியல் என்ற பணி பட்டியலை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளார். அந்த பட்டியல் துவக்கத்தில் திருக்குறள் ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த திருக்குறளுக்கான பொருள் அதற்கான பதிவுரை போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதற்கு கீழே முதலமைச்சரின் புகைப்படம், உதயநிதி புகைப்படம், எம்எல்ஏ புகைப்படம் போன்றவை இடம் பெற்றுள்ளது.

அதற்கு கீழே அந்த மாதம் 31 தேதி வரையுமான அனைத்து நாட்களிலும் எம்எல்ஏ என்ன செய்தார் என்ற முழு விவரங்களும் இடம் பெற்றுள்ளன. அத்துடன் ஒரு மாதத்திற்கான புகைப்படங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. இவையெல்லாம் எப்படி சாத்தியம் என்று எம்எல்ஏ வட்டாரத்தில் விசாரித்த போது பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.

எம்எல்ஏ கண்ணன் ஒரு கல்வியாளர். அவரது உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில் ஐடி படித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்து உள்ளூர் அளவில் ஐடி விங் ஒன்றையே அமைத்து கண்ணனுக்காக பணியாற்றி வருகின்றனர். கண்ணன் செல்லும் இடமெல்லாம் செல்லும் இந்த குழு நண்பர்கள் நிகழ்ச்சி விவரம் புகைப்படம் போன்றவற்றை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்தே இணையங்களில் பதிவேற்றி உடனுக்குடன் தகவல்களை சேர்த்து வருகின்றனர்.

ஒரிஜினல் தளபதிக்கே டஃப் கொடுக்கும் ஒன்றிய தளபதி

இதற்காக க.சொ.க பாசறை, க.சொ.க கண்ணன் பாசறை, க.சொ.க கண்ணன் எம்.எல்ஏ, கண்ணன் பொலிட்டீசியன் போன்ற பல பெயர்களில் இந்த உள்ளூர் ஐடி விங்க் இயங்கி வருகிறது தெரியவந்துள்ளது. இதில் கண்ணனுக்கு ஒன்றிய தளபதி என்ற அடைமொழியையும் கொடுத்துள்ளனர் என்பது தான் இதில் ஹைலைட். ஒரிஜினல் தளபதிக்கு ஒன்றிய தளபதி மேட்டர் தெரியுமா.....? என பலர் தங்களது கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சங்கரன்கோவில் முக்கிய வீதியில் நாட்டு வெடிகுண்டா? - நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.