இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவக பிரதான கூட்ட அரங்கில் ஆட்சிமொழிப் பயிலரங்க கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதுமிலிருந்து அனைத்துத்துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர். பயிலரங்கத்தில் ஆட்சிமொழி வரலாறு சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்க அரசாணைகள், மொழிபெயர்ப்பு கலைச்சொல்லாக்கம் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் அரசு அலுவலர்கள் தமிழில் கோப்புகளை எவ்வாறு கையாளவேண்டும், கையொப்பங்களை தமிழில் இடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா, “வெளிநாடுகளில் வாழ்பவர்களும் தமிழில் பேசவும் எழுதவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நாம் ஆங்கிலம் கலந்த தமிழை பேசி, எழுதி வருகின்றோம். ஆங்கில வார்த்தைகளுக்கு பதில் அகராதியில் தேடி தமிழ் வார்த்தைகளை கண்டுபிடித்து தமிழில் கோப்புகளை எழுத ஆரம்பித்தால் விரைவில் பழக்கத்திற்கு வந்துவிடும்.
அரியலூர் மாவட்டத்தைப் பொருத்தவரையில் 87 சதவிகிதம் அரசு அலுவலகங்களில் தமிழில் கோப்புகள் மற்றும் அலுவல்கள் நடைபெற்று வருகின்றது. இதை 100சதவீதமாக நடைமுறைப்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களும் முயற்சிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க...மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை