ETV Bharat / state

1500 கிலோ அரிசி மூட்டைகளை வழங்கிய அமைச்சர்! - aiadmk minister vellamandi

திருச்சி: ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதற்காக 1,500 கிலோ அரிசி மூட்டைகளை மாநகராட்சிக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

rice
rice
author img

By

Published : Apr 21, 2020, 12:12 PM IST

கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்திவருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்கள் உணவுக்காக திண்டாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏழைகளுக்கு நேரடியாக உணவுப் பொருள்கள், நிவாரணப் பொருள்கள் வழங்கும்போது அரசு அலுவலர்கள் உடன் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து திருச்சி மாநகரில் உள்ள அம்மா உணவகங்களில் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதற்கான செலவை அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த வகையில் தலா 5 கிலோ வீதம் 300 அரிசி மூட்டைகளை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தார்.

1500 கிலோ அரிசி மூட்டைகளை ஒப்படைத்த அமைச்சர்

மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், ஏழை எளிய மக்களுக்கு இந்த அரிசி மூட்டைகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் அம்மா உணவகத்தில் இலவச உணவு திட்டத்திற்கும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி பணியாளர்கள், அதிமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சேலம் அம்மா உணவகங்களில் அதிமுக சார்பில் முட்டையுடன் கூடிய இலவச உணவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.