அரியலூரில் அதிமுக கட்சி தொடங்கி 48ஆவது ஆண்டுகள் ஆனதை ஒட்டி எம்ஜிஆர், அண்ணா சிலைகளுக்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அரியலூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டனர். பின்னர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகளை அதிமுகவினர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று பெரம்பலூரில் அதிமுக கட்சியின் 48ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா, பெரியார் சிலைகளுக்கு அதிமுகவின் மாநில எம்ஜிஆர் மன்றச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . அதனைத் தொடர்ந்து தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: