அரியலூர் அருகே செந்துறை செல்லும் சாலையில் அமினா பாத் கிராமத்தில் பொது மக்கள் முகக்கவசம், தலைக்கவசம் அணியாமல் வருவதை கண்டு மாவட்ட ஆட்சியர் ரத்னா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் திடீரென சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தலைக்கவசம் அணியாதவர்களை நிறுத்தி அபராதம் விதித்தனர்
மேலும், கரோனா குறித்த விழிப்புணர்வையும், பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக பேசினார்கள். ஆய்வின்போது லாரியில் ஓட்டுநர் ஒருவர் முக கவசம் அணியாது வந்தபோது லாரியை நிறுத்தக் கூறினர். லாரி ஓட்டுநர் சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்த சென்றபோது இடையில் புகுந்த காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் அரியலூர் செந்துறை சாலை சுமார் ஒரு மணிநேரம் பரபரப்புடன் காணப்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதுமில்லை.