முன்னாள் குடியரசுத் தலைவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் பிறந்தநாள், இன்று நாடு முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது.
அதன்படி, அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை மாவட்டக் கல்வி அலுவலர் செல்வராஜ், பள்ளிக் கல்வி ஆய்வாளர் பழனி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் அப்துல்கலாம் முகமூடி அணிந்து நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாகச் சென்றனர். இப்பேரணி அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. மேலும் அங்கு அப்துல்கலாம் குறித்த ஓவியம், கட்டுரை, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: இந்தியா வாரியணைத்துக்கொண்ட தமிழ்ப் புதல்வன் அப்துல்கலாம்