அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் கிராமத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் சேகர் என்பவரது மகள் சக்திகிரன். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மணிலாவில் மருத்துவம் பயின்றுவருகிறார். தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், நாடுகளுக்கிடையேயான விமானச்சேவைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.
மேலும், அவர்கள் அனைவரும் பயிலும் கல்லூரியின் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தங்களை மீட்டுவர உதவிபுரியுமாறும் தங்களின் குடும்பத்தாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனையடுத்து, சேகர் தனது மகளையும், மகளுடன் பயின்றுவரும் இருநூறுக்கும் மேற்பட்ட இந்தியர்களையும் தனி விமானம் மூலம் தாயகம் மீட்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவினை தமிழ்நாடு அரசின் பரிசீலணைக்கு அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ரத்னா உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: எங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு உதவத் தயார் - சீனா வாக்குறுதி