அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே மயிலாடுகோட்டை என்ற இடத்தில், ஆறு பேர் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதியது. இதில், சதீஷ், விக்கி, கைராம், அஜித், ஆகிய நால்வர் பலியாகினர். மீதமுள்ள இரண்டு பேருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருகின்றது.
நாயக்கர் பாளையத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவந்தாலும் அவர்கள் மாற்றுப்பாதையில் சென்றபோது விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தப்பிச்சென்ற லாரி ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சிமெண்ட் ஆலைகளுக்குச் சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் தொடர்ந்து விபத்து ஏற்படும் நிலை தொடர்கதையாகிவருகிறது. இதனால் டிப்பர் லாரிகளுக்கென தனி சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.