அரியலூர் மாவட்டம் பாரதியார் நகரில் வசிப்பவர் காமராஜ்(54). இவர் ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளராக வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி எழிலரசி இரண்டு மகள்களுடன் வசித்துவருகிறார். இதனிடையில் காமராஜ் உள்ளாட்சித் தேர்தல் பணிக்காக சென்றுள்ளார். அவரது மனைவி, மகளுடன் அவரது தந்தை வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் கதவுகளை போலி சாவி கொண்டு திறந்து பீரோவிலிருந்த 30 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் எழிலரசி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையில் புகார் அளித்தார்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில் செந்துறை தாலுகா அலுவலகம் அருகே உள்ள சில வீடுகளில் இதேபோன்று பல கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால் இதுவரை எந்த குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை. இதனாலேயே தொடர்ந்து இப்பகுதியில் கொள்ள சம்பவம் நடைபெறுகிறது. அரசும் காவல் துறையும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து பொருட்களை மீட்க வேண்டும். அப்போதுதான் இப்பகுதி மக்கள் அச்சமின்றி வாழ முடியும் என்றனர்.
இதையும் படிங்க: