மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி டோக்கியோவில் தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வட்டு எறிதல் போட்டியின் எஃப்-52 பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் பங்கேற்றார்.
இப்போட்டியில், வினோத் குமார் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கான மூன்றாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். ஆனால், வினோத் குமாரின் மாற்றுத்திறன் வகைப்பாட்டில் சந்தேகம் எழுந்ததை அடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட பதக்கம் மறு பரிசீலனையில் இருந்தது.
இந்நிலையில், வினோத் குமாரின் பதக்கம் பறிக்கப்படுவதாக டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொழில்நுட்ப குழு அறிவித்துள்ளது. இதனால் ஏழு என இருந்த இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தற்போது ஆறாக குறைந்துள்ளது.