டோக்கியோ: மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், வில்வித்தை போட்டியில் ஆடவர் தனிநபர் தகுதிச்சுற்று போட்டிகள் இன்று (ஆக. 27) நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் ராகேஷ் குமார், ஸ்யாம் சுந்தர் சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இரண்டாம் பாதியில் பாய்ச்சல்
முதல் பாதியில், ராகேஷ் குமார் 8ஆவது இடத்திலும், ஷியாம் சுந்தர் 26ஆவது இடத்தையும் பிடித்தனர். பின்னர் இரண்டாம் பாதியில், ராகேஷ் அடுத்தடுத்து பெரும் புள்ளிகளை பெற்றி முன்னேறினார்.
இதன்மூலம், போட்டி முடிவில் ராகேஷ் குமார் 699 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தையும், ஷியாம் சுந்தர் சுவாமி 682 புள்ளிகளுடன் 21ஆவது இடத்தையும் பெற்றனர்.
ஒரு பதக்கம் உறுதி
முன்னதாக, இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. நாளை (ஆக. 28) நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், பவின்பென் படேல், சீன வீராங்கனை ஜாங் மியாவோவை சந்திக்கிறார்.
இதையும் படிங்க: LEEDS TEST: பொறுமை காட்டும் ரோஹித் - புஜாரா இணை