டோக்கியோ: மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் ஒன்பது விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், மகளிர் பவர்லிஃப்டிங் 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிச்சுற்று போட்டிகள் இன்று (ஆக.27) நடைபெற்றது. இதில், காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை சகினா கத்துன் இடம்பங்கேற்றார். முதல் வாய்ப்பில், 90 கிலோ எடையை சகினா தூக்கினார். முதல் சுற்று முடிவில் எகிப்து வீராங்கனை ரெகப் அகமத் (104 கிலோ) முதலிடத்திலும், சகினா ஆறாவது இடத்திலும் இருந்தனர்.
மிஸ்ஸானது பதக்கம்
93 கிலோ எடையைத் தூக்கும் இரண்டாவது வாய்ப்பை சகினா தவறவிட, அடுத்த வாய்ப்பில் அதே 93 கிலோவை தூக்கினார். இதன்மூலம், சகினா ஐந்தாம் இடம்பிடித்து பதக்கத்தை தவறவிட்டார்.
-
#Parapowerlifting Update
— SAI Media (@Media_SAI) August 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Sakina Khatun finishes 5th with the highest bench press of 93kg in the women’s 50 Kg event
We wish her the best for future competitions #Powerlifting #Paralympics #Praise4Para
">#Parapowerlifting Update
— SAI Media (@Media_SAI) August 27, 2021
Sakina Khatun finishes 5th with the highest bench press of 93kg in the women’s 50 Kg event
We wish her the best for future competitions #Powerlifting #Paralympics #Praise4Para#Parapowerlifting Update
— SAI Media (@Media_SAI) August 27, 2021
Sakina Khatun finishes 5th with the highest bench press of 93kg in the women’s 50 Kg event
We wish her the best for future competitions #Powerlifting #Paralympics #Praise4Para
மேலும், இன்று (ஆக.27) நடைபெறும் ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டியில், இந்திய வீரர் ஜெய்தீப் குமார் பங்கேற்க உள்ளார். முன்னதாக, மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் காலிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சம்மர் ஒலிம்பிக்
டோக்கியோவில், 2020 கோடைக்கால ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்று ஏழு பதக்கங்களை வென்றனர். நீரஜ் சோப்ரா தடகளப் பிரிவான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று சிறப்பித்தார்.
இதையும் படிங்க: TOKYO PARALYMPICS: பவினாபென் படேல் காலிறுதிக்கு முன்னேற்றம்