டோக்கியோ : 32 வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 57 கிலோ மகளிர் ப்ரீஸ்டைல் பிரிவு மல்யுத்த போட்டி இன்று நடைபெற்றது.
இதில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் பெலராஸ் நாட்டின் இரினா குராச்ச்கினாவை (Iryna Kurachkina) எதிர்கொண்டார்.
ஆட்டம் தொடங்கிய முதலே இரினா முன்னிலையில் இருந்து வந்தார். இடையே இடையே அன்ஷூ மாலிக் தனது ஆக்ரோஷத்தை காட்டினாலும், இறுதியில் இரினா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் மலயுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அன்ஷூ மாலிக், ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
இதையும் படிங்க : மல்யுத்தம் - அரையிறுதியில் தீபக் பூனியா