டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று நாட்டுக்கு பதக்கத்துடன் திரும்பவில்லை, ஆகையால் என்னை மன்னித்துவிடுங்கள் என இந்திய வில்வித்தை வீரர் அதானு தாஸ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
வில்வித்தை வீரர் அதானு தாஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜப்பான் வீரர் தகஹாரு ஃபுருகவா (Takaharu Furukawa)விடம் 1/8 நாக்அவுட் சுற்றில் தோல்வியுற்று வெளியேறினார்.
இந்நிலையில் அவர் ட்விட்டரில், “மன்னித்து விடுங்கள் இந்தியர்களே. என்னால் நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியவில்லை. ஆனாலும் உங்களின் ஆதரவு அமோகமாக உள்ளது. நாம் இன்னமும் முன்னோக்கி செல்ல வேண்டும். வேறு சொல்ல எதுவும் இல்லை. ஜெய்ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.
-
Sorry INDIA🙏🏼, I couldn’t bring glory in this Olympics. But the support we get from @Media_SAI @indian_archery TOPS, @OGQ_India Is fantastic till now. We should keep moving forward, else nothing to say. Jai hind🇮🇳 pic.twitter.com/Kqqm03nt8r
— TheAtanuDas (@ArcherAtanu) July 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sorry INDIA🙏🏼, I couldn’t bring glory in this Olympics. But the support we get from @Media_SAI @indian_archery TOPS, @OGQ_India Is fantastic till now. We should keep moving forward, else nothing to say. Jai hind🇮🇳 pic.twitter.com/Kqqm03nt8r
— TheAtanuDas (@ArcherAtanu) July 31, 2021Sorry INDIA🙏🏼, I couldn’t bring glory in this Olympics. But the support we get from @Media_SAI @indian_archery TOPS, @OGQ_India Is fantastic till now. We should keep moving forward, else nothing to say. Jai hind🇮🇳 pic.twitter.com/Kqqm03nt8r
— TheAtanuDas (@ArcherAtanu) July 31, 2021
அதானு தாஸை 29 வயதான ஜப்பானியர் ஃபுருகவா 6-4 என்ற புள்ளியில் தோற்கடித்தார். அதேபோல் மகளிர் ஒற்றையர் சுற்றில் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியும், தென்கொரிய வீராங்கனை ஆன் சாங் (An San)கிடம் வீழ்ந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் தென்கொரிய வீரர்கள் துல்லிய தாக்குதல்கள் நடத்தினார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : டோக்கியோ ஒலிம்பிக் - இந்திய வில்வித்தை வீரர் அதானு தாஸ் தோல்வி