டோக்கியோ: ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துச்சண்டை ஃப்ளைவெயிட் பிரிவின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் இன்று (ஜூலை 29) நடைபெற்றது. இதன் ஒரு போட்டியில், கொலம்பியா நாட்டின் இங்க்ரிட் வலென்சியாவை இந்தியாவின் மேரி கோம் சந்தித்தார்.
பரபரப்பாக ஆரம்பித்த இப்போட்டியின், முதல் சுற்றை வலென்சியா வென்று அசத்த, இரண்டாம் சுற்றை மேரி கோம் கைப்பற்றி பதலடி கொடுத்தார். வெற்றியை உறுதி செய்யும் மூன்றாம் சுற்றை வலென்சியா வென்று, ஆறு முறை உலக சாம்பியனான மேரி கோமை வீழ்த்தினார்.
தகர்ந்தது கனவு
2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்த மேரி கோமிற்கு, இது கடைசி ஒலிம்பிக் என்பதால் பதக்கம் வெல்லாமல் அவர் வெளியேறியிருப்பது அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: Tokyo Olympics: ஜமைக்கா வீரரை குத்தி தள்ளிய சதீஷ் குமார்!