ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 9ஆவது நாள்: எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்திய போட்டியாளர்கள்! - டோக்கியோ ஒலிம்பிக்

வில்வித்தை வீரர் அதானு காலிறுதிக்கு முன்னேறும்போது, இறகு பந்தாட்டத்தில் பிவி சிந்து ஒலிம்பிக் இறுதிப் போட்டிகளில் தனது இடத்தை உறுதி செய்வார். குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால், தடகள வீரர்களான சீமா புனியா, கமல்பிரீத் கவுர் மற்றும் ஸ்ரீசங்கர் ஆகியோரின் விளையாட்டும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
author img

By

Published : Jul 31, 2021, 5:56 AM IST

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகள் 9ஆவது நாளான இன்று, இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது

இன்றையப் போட்டிகளில் விளையாடும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் விவரம்

அதானு தாஸ் - வில்வித்தை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஒற்றையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் வீரர் அதானு தாஸ், தென் கொரியாவின் ஓ ஜின்-ஹைக்கை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதையடுத்து வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற, இன்று ஜப்பான் நாட்டு வீரரை எதிர்கொள்கிறார்.

பூஜா ராணி - குத்துச்சண்டை

பெண்களுக்கான 69-75 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்புடன் மோதினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று காலிறுதி சுற்றில் சீன வீராங்கனையுடன் மோதுகிறார்.

அமித் பங்கல் - குத்துச்சண்டை

ஆடவர் பிளைவெயிட் ரவுண்ட் ஆப் 16 போட்டியில் கொலம்பியாவின் யூபர்ஜென் ஹெர்னி மார்டினெஸ் ரிவாஸுடன் மோதுகிறார்.

பிவி சிந்து - இறகுபந்து

சிந்து ஜப்பான் வீராங்கனையை 21-13, 22-20 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் அவர் ஒலிம்பிக் ஒற்றையர் அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்றைய அரையிறுதி போட்டியில், சீன வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.