டோக்கியோ: ஒலிம்பிக்கின் எட்டாவது நாளின் (ஜூலை 30) முழுமையான அட்டவணை கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது. (அனைத்தும் இந்திய நேரப்படி)
வில்வித்தை (மகளிர் தனிநபர்)
தீபிகா குமாரி vs க்சேனியா பெரோவா (ரஷ்யா)- ரவுண்ட் ஆஃப் 8 - காலை 6:00
(ரவுண்ட் ஆஃப் 8இல் தீபிகா குமாரி தகுதிபெறும்பட்சத்தில்)
காலிறுதிச் சுற்று - பகல் 11:30
அரையிறுதிச் சுற்று - நண்பகல் 12:15
வெண்கலப் பதக்கச் சுற்று - மதியம் 1:00
இறுதிச்சுற்று - மதியம் 1:15
தடகளம்
அவினாஷ் சேபிள் - ஆடவர் 3000 மீட்டர் ஸ்டீல் பில்சேஸ்: ஹீட் 2 - காலை 6:17
எம்பி ஜாபீர் - ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயம்: ஹீட் 5 - காலை 8:27
டூட்டி சந்த் - மகளிர் 100 மீட்டர் ஹீட்ஸ் - காலை 8:45
இந்திய அணி - 4x400 கலப்பு தொடர் ஓட்டப்பந்தயம்: ஹீட் 2 - மாலை 4:42 (தமிழ்நாடு வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி ஆகியோர் அணியில் இடம்பெற வாய்ப்பு )
பேட்மிண்டன்
பி.வி.சிந்து vs அகானே யமகுச்சி (ஜப்பான்) - காலிறுதிச் சுற்று: மகளிர் ஒற்றையர் பிரிவு - மதியம் 1:15
குத்துச்சண்டை
சிம்ரன்ஜித் கவுர் vs சூடாபோர்ன் சீசோண்டி (தாய்லாந்து) - ரவுண்ட் ஆஃப் 16: மகளிர் லைட்வெயிட் எடைப்பிரிவு (57-60 கிலோ) - காலை 8:18
லவ்லினா போர்கோஹெய்ன் Vs நியென்-சின் சென் (தைவான்) - காலிறுதிச் சுற்று: மகளிர் வெல்டர்வெயிட் எடைப்பிரிவு (64-69 கிலோ) - காலை 8:48
குதிரையேற்றம்
ஃபவுத் மிர்சா - தனிநபர் டிரஸ்சேஜ் போட்டி - மதியம் 2:00
கோல்ஃப்
ஆடவர் இரண்டாம் சுற்று
உதயன் மானே - காலை 5:44
அனிர்பன் லஹிரி - காலை 7:17
ஹாக்கி
இந்தியா vs அயர்லாந்து - மகளிர் 'ஏ' பிரிவு - காலை 8:15
இந்தியா vs ஜப்பான் - ஆடவர் 'ஏ' பிரிவு - மதியம் 3:00
பாய்மரப் படகுபோட்டி
நேத்ரா குமணன் - மகளிர் லேசர் ரேடியல்: ரேஸ் 9,10 - காலை 8:35
கே.சி.கணபதி, வருண் தக்கர் - ஆடவர் ஸ்கிஃப் 49ஈஆர்: ரேஸ் 7,8,9 - காலை 8:35
விஷ்ணு சரவணன் - ஆடவர் லேசர்: ரேஸ் 9,10 - பகல் 11:05
துப்பாக்கிச்சுடுதல்
மனு பாக்கர், ரஹி சர்னோபாத் - மகளிர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல்: ரபிட் குவாலிஃபிகேஷன் - காலை 5:30
(இருவரும் ரபிட் குவாலிஃபிகேஷனில் தகுதிப்பெறும்பட்சத்தில்)
இறுதிச் சுற்று - காலை 10:30
இதையும் படிங்க: வெற்றி மங்கை மீராபாயை பாராட்டணுமா... போஸ்ட் ஆபிஸ் வாங்க - வேலூரில் புதுமுயற்சி!