ETV Bharat / sports

41 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி

டோக்கியோ ஒலிம்பிக்கின் மகளிர் ஹாக்கியில் அயர்லாந்து அணியை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது

Women's Hockey
இந்திய மகளிர் அணி
author img

By

Published : Jul 30, 2021, 7:00 PM IST

32ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இதில் மகளிர் பிரிவு ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.

இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த நிலையில், 57ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்னீத் கவுர் ஒரு கோல் அடித்து வெற்றி பாதைக்கு இந்திய அணியைக் கொண்டு சென்றார். போட்டி நேர முடிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது.

தற்போது, குரூப் ஏ பிரிவில் தலா 3 புள்ளிகளுடன் அயர்லாந்து 4ஆம் இடத்திலும், இந்திய அணி 5ஆம் இடத்திலும் உள்ளன. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும். எனவே, காலிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது.

அந்த அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து கடைசி இடத்தில் உள்ளதால், இந்திய அணி நிச்சயம் காலிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.