ETV Bharat / sports

Tokyo Olympics: சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு தகுதி - ஒலிம்பிக்

தமிழ்நாட்டு வீரர் சரத் கமல், டேபிஸ் டென்னிஸ் போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Sharath Kamal
Sharath Kamal
author img

By

Published : Jul 26, 2021, 8:01 AM IST

டோக்கியோ : 2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கின. நான்காம் நாளான இன்று (ஜூலை 26) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு டேபிஸ் டென்னிஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வீரர் சரத் கமல் ( Sharath Kamal), போர்ச்சுகல் வீரர் தியாகோ அப்பலோனியா (Tiago Apolonia) ஆகியோர் மோதினர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் ஆட்டத்தில் சரத் கமல் 2-11 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இருப்பினும் அடுத்த இரு ஆட்டங்களையும் சரத் கமல் தனதாக்கினார். நான்காம் ஆட்டத்தில் தியாகோ வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி 4-4 என்ற கணக்கில் டிரா ஆனது.

இந்நிலையில் புள்ளி அடிப்படையில் சரத் கமல் தியாகோ அப்பலோனியாவை வென்று மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். சரத் கமல், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

இதையும் படிங்க : Tokyo Olympics: தமிழச்சி பவானி தேவி வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.