ஹைதராபாத்: டோக்கியோ ஒலிம்பிக் 2ஆம் நாளான இன்று(ஜூலை.24) இந்திய வீரர்கள் முக்கிய போட்டிகளில் களமாட உள்ளனர். 15 நாள் ஒலிம்பிக் போட்டிகளின் 2வது நாளான இன்று(ஜூலை.24), நாம் கண்காணிக்க வேண்டிய விளையாட்டு வீரர்கள் மற்றும் அணிகள் குறித்து கீழ்க்கண்டவாறு காணலாம்.
விகாஷ் கிரிஷன் (குத்துச்சண்டை)
விகாஷ் கிரிஷன் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இந்திய முக்கிய குத்துச்சண்டை வீரர்களில் ஒருவர். வெல்டர்வெயிட் (69 கிலோ) வகை குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிரிஷன் (29) ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பல தங்கப் பதக்கம் வென்றவர்.
இது அவரது மூன்றாவது ஒலிம்பிக் ஆகும். 2012 இல் லண்டனில் ஒரு முரட்டுத்தனமான ஆட்டத்திற்குப் பிறகு, அவர் காலிறுதிக்கு முன்னேறினார், ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரியோவில் பெக்டெமிர் மெலிகுசீவிடம் தோற்றார்.
இருப்பினும், 69 கிலோ குத்துச்சண்டை வீரராக இவர் மாறியது, சமீபத்திய ஆண்டுகளில் உலக அரங்கில் அவருக்குக் கணிசமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. தற்போது ஒலிம்பிக்கில் வலுவான போட்டியாளர்களில் ஒருவராக அவரை ஆக்கியது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: தேசியக்கொடியை ஏந்திவந்த மேரிகோம், மன்பிரீத் சிங்!
ஆண்கள் ஹாக்கி அணி
ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, எட்டு தங்கப் பதக்கங்கள் வென்ற முக்கியமான அணியாகும். இன்று(ஜூலை.24), மன்பிரீத் சிங் தலைமையிலான மற்றும் கிரஹாம் ரீட் பயிற்சியாளர் இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்திற்கு எதிராக ஆடவுள்ளது.
தற்போது நான்காவது இடத்தில் உள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, டோக்கியோ கடைசியாக 1964 இல் ஒலிம்பிக்கை நடத்தியபோது இந்த அணி தங்கப்பதக்கம் வென்றது.
மீராபாய் சானு (பளு தூக்குதல்)
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரியோவில் ஏற்பட்ட தோல்வி மணிப்புரியின் பளுதூக்குபவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலப்படுத்தியது. 2016 ஆம் ஆண்டின் தோல்விக்குப் பின்னர், 2017 உலக சாம்பியன்ஷிப் மற்றும் 2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களுடன் தனக்கென ஒரு வலுவான இடத்தை உருவாக்கினார்.
2020 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவரது வெண்கலம் அவரது வழக்கை வலிமையாக்கவில்லை என்றாலும், தீவிர பயிற்சி இல்லாமல் வீட்டில் நாட்கள் கழித்தாலும் அவர் இந்த நிகழ்வில் போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்- தீபிகா குமாரி அசத்தல்
துப்பாக்கிச் சூடு
இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களான இளவேனில் வாலறிவன், அபுர்வி சண்டேலா, சவுரப் சவுத்ரி மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோர், கடந்த ஒலிம்பிக் சர்வதேச போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருப்பதால் அனைத்து கண்களும் அவர்கள் மீது இருக்கும்.
2019 ஆம் ஆண்டில் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பையில் 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் இளவேனில் வாலறிவன் இரண்டு தங்கங்களை வென்றார்.
மறுபுறம், சவுரப் மற்றும் அபிஷேக், 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் ஆண்கள் சவாலாக இருப்பார்கள். சவுரப் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பல தங்கம் மற்றும் வெள்ளி வென்றார். அவரது சக துப்பாக்கி சுடும் அபிஷேக்கும் கடந்த ஒலிம்பிக் சுழற்சியில் சீராக இருந்தார்.
பூப்பந்தாட்டம்
உலக தரவரிசை பட்டியலில் 10வது இடத்தில் உள்ள ஆண்கள் இரட்டையர் ஜோடியான சாத்விக்சைராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர், தற்போது லீ யாங் மற்றும் சீன தைபியின் வாங் சி-லினுக்கு எதிராக களமாடவுள்ளனர் . இது இந்திய ஜோடிக்கு கடினமான போட்டியாகும்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், பி சாய் பிரனீத் இஸ்ரேலின் ஜில்பர்மன் மிஷாவுக்கு எதிராக களமாட உள்ளார்.