ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை: பூஜா ராணி வெளியேற்றம் - பெண்கள் குத்துச்சண்டை மிடில்வெயிட்

பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, காலிறுதிப்போட்டியில் சீனா வீராங்கனையிடம் தோல்வியடைந்து பதக்கமின்றி வெளியேறியுள்ளார்.

பூஜா ராணி, pooja rani
பூஜா ராணி
author img

By

Published : Jul 31, 2021, 7:21 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் பெண்கள் குத்துச்சண்டை மிடில்வெயிட் (69-75 கிலோ) பிரிவில் இன்று (ஜூலை 31) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி, சீனா நாட்டின் லி கியான் உடன் மோதினார்.

இப்போட்டியில், லி கியான் ஆட்டத்திற்கு பூஜாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால், 5-0 என்ற புள்ளிக்கணக்கில் பூஜாவை வீழத்தி லி கியான் அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெண்கள் குத்துச்சண்டையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம், பதக்கம் வெல்லாமல் வெளியேறியதைப் போன்று பூஜாவும் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும், இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அந்தப் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: பி.வி.சிந்து அரையிறுதியில் ஏமாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.