ETV Bharat / sports

Tokyo Olympics: தமிழ்நாட்டின் இளவேனில் ஏமாற்றம்

author img

By

Published : Jul 24, 2021, 7:31 AM IST

Updated : Jul 24, 2021, 10:47 AM IST

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைபில் தகுதிச் சுற்றுப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டித்தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று பதக்கங்களுக்கான போட்டிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன், அபூர்வி சந்தேலா ஆகியோர் பங்கேற்றனர்.

தகுதிச் சுற்று போட்டியில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார்கள். இந்நிலையில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இளவேனில் தகுதிச் சுற்றிலேயே தோல்வியை தழுவி ஏமாற்றம் அளித்தார்.

மொத்தமுள்ள 60 ஷாட்களில் 626.5 புள்ளிகள் மட்டுமே எடுத்த இளவேனில் தரவரிசை பட்டியலில் 16ஆவது இடத்தை பிடித்தார். அதேப்போல் மற்றொரு வீராங்கனையான அபூர்வி சந்தேலா 621.9 புள்ளிகள் எடுத்து 26ஆவது இடத்தை பிடித்தார்.

Our shooters at the Women's 10m Air Rifle, @elavalarivan and @apurvichandela finished 16th and 36th respectively in the qualification round.

Let's continue to support #TeamIndia at #Tokyo2020#Cheer4India @PMOIndia @ianuragthakur @NisithPramanik @OfficialNRAI @WeAreTeamIndia

— SAIMedia (@Media_SAI) July 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நார்வே வீராங்கனை ஜெனத்தே ஹெக் 632.9 புள்ளிகளை பெற்று புதிய ஒலிம்பிக் சாதனையுடன் இந்தத் தகுதிச் சுற்றில் முதல் இடத்தை பிடித்தார். இதன் மூலம் பதக்க சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்த இளவேனில், அபூர்வி சந்தேலா போட்டியிலிருந்து வெளியேறினர்.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 2ஆவது நாள்: கவனிக்கப்பட வேண்டிய இந்திய விளையாட்டு வீரர்கள்..!

ஒலிம்பிக் போட்டித்தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று பதக்கங்களுக்கான போட்டிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன், அபூர்வி சந்தேலா ஆகியோர் பங்கேற்றனர்.

தகுதிச் சுற்று போட்டியில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார்கள். இந்நிலையில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இளவேனில் தகுதிச் சுற்றிலேயே தோல்வியை தழுவி ஏமாற்றம் அளித்தார்.

மொத்தமுள்ள 60 ஷாட்களில் 626.5 புள்ளிகள் மட்டுமே எடுத்த இளவேனில் தரவரிசை பட்டியலில் 16ஆவது இடத்தை பிடித்தார். அதேப்போல் மற்றொரு வீராங்கனையான அபூர்வி சந்தேலா 621.9 புள்ளிகள் எடுத்து 26ஆவது இடத்தை பிடித்தார்.

நார்வே வீராங்கனை ஜெனத்தே ஹெக் 632.9 புள்ளிகளை பெற்று புதிய ஒலிம்பிக் சாதனையுடன் இந்தத் தகுதிச் சுற்றில் முதல் இடத்தை பிடித்தார். இதன் மூலம் பதக்க சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்த இளவேனில், அபூர்வி சந்தேலா போட்டியிலிருந்து வெளியேறினர்.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 2ஆவது நாள்: கவனிக்கப்பட வேண்டிய இந்திய விளையாட்டு வீரர்கள்..!

Last Updated : Jul 24, 2021, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.