ETV Bharat / sports

PREVIEW: தங்கத்தை நோக்கி லவ்லினா; அரையிறுதியில் உலக சாம்பியனுடன் மோதல்!

author img

By

Published : Aug 3, 2021, 6:01 PM IST

Updated : Aug 3, 2021, 11:59 PM IST

பதக்கம் என்றால் தங்கம்தான், வேறு பதக்கம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்பதுதான் இந்தியாவின் பதக்க நம்பிக்கை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்னின் தாரக மந்திரம்.

லவ்லினா, மகளிர் குத்துச்சண்டை, WOMEN'S BOXING
Lovlina chases historic Olympic final berth

டோக்கியோ ஒலிம்பிக் இந்தியாவின் நட்சத்திரங்கள் எனக் கூறப்பட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. மேரி கோம், தீபிகா குமாரி, மணிகா பத்ரா, மனு பாக்கர், யாஷஸ்வினி சிங் தேஸ்வால் என வெவ்வேறு விளையாட்டுகளில் உலகத்தர வீராங்கனையாகத் திகழ்ந்த இந்திய மங்கைகளுக்கு டோக்கியோ கை வரப்பெறவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்துள்ள மீரா பாய், பி.வி. சிந்து இருவருக்கு அடுத்து, பதக்கத்தை உறுதிசெய்திருந்த லவ்லினா தான் டோக்கியோவின் சர்ப்ரைஸ் கிஃப்ட்.

நண்பகல் பயிற்சி

ஆகஸ்ட் 4ஆம் தேதியான நாளை லவ்லினா, உலக சாம்பியனான துருக்கி நாட்டைச் சேர்ந்த புஸ்னேஸ் சுர்மேனேலி உடன் மோத இருக்கிறார். நாளைய போட்டியில் அவர் வென்றால், ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

தங்கத்தை நோக்கி லவ்லினா; அரையிறுதியில் உலக சாம்பியனுடன் மோதல்!

அரையிறுதி குறித்து லவ்லினாவின் பயிற்சியாளர் கூறுகையில்,"அரையிறுதிப் போட்டி நண்பகலில் நடக்க இருப்பதால், கடந்த இரு தினங்களாக நண்பகலில் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். லவ்லினா அனைத்து வியூகங்களையும் புரிந்துகொண்டு ஆட்டத்திற்குத் தயாராக இருக்கிறார்.

அவருடைய விளையாட்டின்மீது பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார். நிச்சயம் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்" என்றார்.

லவ்லினா vs புஸ்னேஸ் சுர்மேனேலி

லவ்லினா மோத இருக்கும் துருக்கி வீராங்கனை இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றவர். அவர் 2015ஆம் ஆண்டிலேயே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என்று அந்நாட்டு அதிபரிடம் வாக்கு கொடுக்கும் அளவிற்கு மிக உறுதியான வீராங்கனை.

பதக்கம் என்றால் தங்கம் தான். வேறு பதக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் லவ்லினாவுடைய வெற்றிக்கான தாரக மந்திரம். யாருடைய பேச்சையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டேன் என்று கூறும் லவ்லினா, இந்த பழக்கத்தால்தான் பயமறியாத வீராங்கனையாக இருக்கிறேன் என்கிறார்.

9 ஆண்டுகளுக்குப் பின் பதக்கம்

காலிறுதியில் சீன தைபே வீராங்கனையை வென்று லவ்லினா, பதக்கத்தை மட்டுமின்றி அவருடைய கிராமத்திற்கு சாலை வசதியையும் கொண்டு வந்துள்ளார்.

23 வயதான லவ்லினா, லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இந்தியாவிற்கு குத்துச்சண்டையில் பதக்கம் வாங்கித்தர இருக்கிறார்.

லவ்லினா சொன்னது போல் பதக்கம் என்றால் தங்கம்தான், நாளைய போட்டியை வெல்வதன் மூலம் அந்த தங்கத்திற்கான பயணத்தில் தனது இறுதிப்படியில் காலடி எடுத்துவைப்பார் லவ்லினா.

இதையும் படிங்க: EXCLUSIVE: ஹாக்கியை ஊக்கப்படுத்துங்கள் - இந்திய வீராங்கனை மோனிகா மாலிக்

Last Updated : Aug 3, 2021, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.