மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி டோக்கியோவில் தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சி-4 பிரிவின் இறுதிப் போட்டி இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது.
இதில், இந்திய வீராங்கனை பவினாபென் படேல், சீன வீராங்கனை சோ யிங்கை (Zhou Ying) எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் யிங்கிடம் 0-3 என்ற செட் கணக்கில் பவினாபென் படேல் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கம் ஆகும். அவரது வெற்றியை , குடும்பத்தினரும் உறவினர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். தேசிய விளையாட்டு தினமான இன்று, இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.
இதையும் படிங்க: ஹிட்லர் வியந்த மேஜர் தயான் சந்த்!