பானிபட் (ஹரியானா): டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அவரின் வெற்றி நாடு முழுக்க எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரின் தந்தை ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில், “நாங்க ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளோம். என் மகன் நாட்டுக்காக தங்கம் வென்றுள்ளான். அவனுக்கு என் ஆசிர்வாதங்கள்” என்றார்.
நீரஜ் சோப்ரா தாயார் கூறுகையில், “எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளான். எல்லாருக்கும் மகிழ்ச்சி. அவன் விளையாடும் போதே நாங்கள் தங்கம் வெல்வான் என்று நினைத்தோம்” என்றார்.
அதேபோல் நீரஜ் சோப்ராவின் சகோதரியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது, “நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்” என்றார்.
நீரஜ் சோப்ராவின் வெற்றியை அவரது குடும்பத்தினர் உள்பட அவ்வூர் கிராம மக்கள் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடினர். நீரஜ் சோப்ரா, ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள கந்த்ரா (Khandra) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் வீசி சாதனை படைத்தார். ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்று இந்தியாவின் 124 ஆண்டுகால காத்திருப்பையும் முடிவுக்கு கொண்டுவந்தார்.
இதையும் படிங்க : நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு- பிசிசிஐ!