ETV Bharat / sports

சாய்னா நேவால் பாராட்டவில்லை - பி.வி. சிந்து - பி வி சிந்து

தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் எனக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் ஆனால் சாய்னா நேவால் பாராட்டவில்லை என பி.வி. சிந்து தெரிவித்துள்ளார்.

சாய்னா நெய்வால், பி வி சிந்து, GOPICHAND, கோபிசந்த்
Gopi sir congratulated me, Saina 'no': PV Sindhu
author img

By

Published : Aug 2, 2021, 5:34 PM IST

டோக்கியோ: நடப்பு உலக சாம்பியனும், கடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவருமான பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று ஆறுதல் அளித்தார்.

இந்நிலையில், போட்டிக்கு பிறகு பி.வி.சிந்து காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கோபிசந்த், சாய்னா நேவால் வெற்றிக்கு பிறகு உங்களைத் தொடர்பு கொண்டார்களா என அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிந்து, "கோபிசந்த் சார் என்னை வாழ்த்தினார். நான் இன்னும் சமூக ஊடகங்களை பார்க்கவில்லை. அனைவருக்கும் இப்போதுதான் பதிலளித்து வருகிறேன்.

கோபி சார் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். சாய்னாவும் நானும் அந்த அளவிற்கு பேசியது கிடையாது என்பதால் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை" என்றார்.

கோபிசந்த் - சிந்து

பி.வி.சிந்து, முதலில் கோபிசந்த் அகாதமியில் பயிற்சி பெற்று வந்த நிலையில் பின்னர், லண்டனில் உள்ள பார்க் டே-சாங் பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்றார்.

உடற்தகுதிக்காகவும், ஊட்டச்சத்து முன்னேற்றத்திற்காகவும்தான் லண்டன் சென்றதாக விளக்கமளித்தார். அதன்பின், இந்தியா திரும்பிய சிந்து, கச்சிபவுலி பயிற்சி மையத்தில்தான் தனது பயிற்சியைத் தொடர்ந்தார்.

கோபிசந்த் - சிந்துவிற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகவே சிந்து கோபிசந்த் அகாதமியில் பயிற்சி பெறவில்லை என பேசப்பட்டது. இதற்கு, சிந்து மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், கோபிசந்த் இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

சாய்னா நேவால் சமூக ஊடகங்களில் இல்லை என்பதால் சிந்துவுக்கு அவர் வாழ்த்து தெரிவிக்க வாய்ப்பில்லை. டோக்கியோ ஒலிம்பிக்கில் சாய்னா நேவால் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: சில விநாடிகள் திகைத்து நின்றேன் - வெற்றிக்கு பின் பி.வி. சிந்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.