ETV Bharat / sports

ஒரு வழியாக பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஆப்கன் வீரர்! - பாரா ஒலிம்பிக்கில் ஆப்கான் வீரர்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பல போராட்டங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் தடகள வீரர் ஹூசைன் ரசோலி இன்று நடைபெற்ற நீளம் தாண்டுதல் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.

ஹூசைன் ரசோலி
ஹூசைன் ரசோலி
author img

By

Published : Aug 31, 2021, 5:00 PM IST

டோக்கியோ: இரண்டு தசாப்தங்களுக்கு (20 ஆண்டுகள்) பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான் படையினர் கைப்பற்றியுள்ளனர். இதனால், ஆப்கானில் தற்போது அசாதரண சூழல் நிழவிவருகிறது.

இந்நிலையில், டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் தொடரில் அந்நாட்டு வீரர்கள் பங்கேறக்க முடியாத சுழல் உருவானது.

காபூல் - டோக்கியோ

இதையடுத்து, ஆப்கான் வீரர்களான ஹூசைன் ரசோலி, ஜாகியா குடதாடி, ஆகியோர் காபூலில் இருந்து வெளியேறி கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 28) அன்று டோக்கியோ வந்தடைந்தனர். தொடருக்கு ஒரு வாரம் தாமதாக வந்த இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் பாதுகாப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இருவரும் ஊடக சந்திப்பை நிராகரித்துவிட்ட நிலையில், ஹூசைன் ரசோலி இன்று (ஆகஸ்ட் 31) நீளம் தாண்டுதல் டி-47 பிரிவில் பங்கேற்றார். இப்போட்டியில், 4.46 மீ தூரத்தை தாண்டி கடைசி இடத்தை பிடித்தார்.

மற்றொரு ஆப்கன் தடகள வீராங்கனையான, ஜாகியா கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து ஒலிம்பிக் டேக்வாண்டோ விளையாட்டில் பங்கேற்று வருகிறார். இத்தொடரில், அவர் நாளை மறுதினம் (செப். 2) நடைபெறும் மகளிர் டேக்வாண்டோ 44-49 கிலோ எடைப்பிரிவு போட்டியில் பங்கெடுக்கிறார்.

வேறு தகவல்கள் கிடையாது

இதுகுறித்து, சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டியின் பிரதிநிதி கிரேக் ஸ்பென்சர் கூறுகையில்," ரசோலியிடம் நேற்று (ஆக. 30) உரையாடினேன். தொடரில் விளையாடுவது குறித்து மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். இதுதான் அவர் பங்கேற்கும் முதல் சர்வதேச அளவிலான போட்டி. இது மிக சிறந்த தருணம். என்னால் இவ்வளவு தான் கூற முடியும்" என அவர்களை பற்றிய பிற தகவல்கள் குறித்து பேச மறுத்துவிட்டார்.

இரு ஆப்கான் தடகள வீரர்களும் கடந்த வார இறுதியில் சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி (IPC) தலைவர் ஆண்ட்ரூ பார்சன்ஸை சந்தித்தனர்.
ஆப்கானிஸ்தான் வீரர்கள் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என ஐபிசி (IPC) முதலில் அறிவித்தது. ஆனால், இரு வீரர்களின் நிலை பாரா ஒலிம்பிக் அமைப்பில் இறங்குவோர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, உலகளவில் அவர்களுக்கு கிடைத்த ஆதரவால், அவ்விருவரும் காபூலில் இருந்து வெளியேறிய பின்னர், பிரான்ஸ் வழியாக டோக்கியோ வந்துள்ளனர்‌ என ஐபிசி (IPC) தலைவர் பார்சன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: PARALYMPIC SHOOTING: சீறினார் சிங்ராஜ்; வென்றார் வெண்கலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.