ETV Bharat / sports

Tokyo Paralympics: இந்திய அணிக்கு வாழ்த்தி வழியனுப்பும் விழா! - அனுராக் தாக்கூர்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 54 வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு வாழ்த்தி வழியனுப்பும் விழா ஒன்றிய விளையாட்டுத் துறை சார்பில் நடத்தப்பட்டது.

Tokyo Paralympics
Tokyo Paralympics
author img

By

Published : Aug 13, 2021, 7:51 AM IST

டெல்லி: 2020 டோக்கியோ கோடைக்கால ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்று ஏழு பதக்கங்களை வென்றனர். நீரஜ் சோப்ரா தடகளப் பிரிவான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று சிறப்பித்தார்.

சம்மர் ஒலிம்பிக் முன்னதாக நிறைவடைந்த நிலையில் அடுத்து, மாற்றுத் திறனாளிக்கள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்தத் தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் ஒன்பது விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று நடைபெறும் தொடக்க விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தேசியக்கொடியை ஏந்திச் செல்வார்.

இந்த முறை இந்திய அணி...

கடந்த ரியோ பாரா ஒலிம்பிக் தொடரில், இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றது. இதில், உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த தொடரை விட மூன்று மடங்கு அதிகமான வீரர்களை இந்த முறை இந்தியா அனுப்ப உள்ளதால், பதக்கமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த முறை, பேட்மிண்டன் போட்டியும் பாரா ஒலிம்பிக் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து ஏழு வீரர்கள் அப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இந்தியாவுக்கு 2004, 2016 பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ள தேவேந்திர ஜஜாரியா, மூன்றாவது முறையாக தங்கம் வெல்லும் ஆவலில் உள்ளார். அதே ஈட்டி எறிதலில் உலக சாம்பியனான சந்தீப் சௌத்ரி, கடந்த முறை தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு ஆகியோரும் இந்த முறை தங்கப் பதக்க வேட்டையில் ஈடுபட வாய்ப்புள்ளது.

அமைச்சர் பாராட்டு

இந்நிலையில், விளையாட்டுத் துறை சார்பில் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியை வாழ்த்தி வழியனுப்பும் கூட்டம் முன்னதாக நடத்தப்பட்டது. கரோனா பயோ-பபுளில் உள்ள வீரர்கள் காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்திய அணி வீரர்களுடன் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்திய பாரா ஒலிம்பிக் குழு தலைவர் தீபா மாலிக், பொதுச்செயலாளர் குர்ஷரன் சிங் ஆகியோர் இதில் உரையாடினர்.

அப்போது பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர்," உங்களுடைய இலக்கும், தன்னம்பிக்கையும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு ஊக்கமளித்துள்ளது. கடந்த ஒலிம்பிக் தொடரை விட இந்த முறை அதிகமான வீரரகள் பங்கேற்க இருப்பதால், அதிக பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வெற்றி பெறுவது எளிதல்ல, ஆனால் உங்களின் கடின உழைப்பும் வெற்றி குறித்த உங்களின் வேட்கையும் நிச்சயமாக வெற்றியை பெற்றுத் தரும்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு முன்னரும் போட்டி நடைபெறும்போதும் பிரதமர் மோடி வீரர்களுக்கு தன்னால் இயன்ற அளவு ஊக்கமளித்தார். இதே போன்று பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கும் பிரதமர் தொடர்ந்து ஊக்கமளிப்பார்" என்றார்.

வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆடவர் மற்றும் மகளிர் வில்வித்தைப் போட்டிகள் மூலம் இந்தியா தனது முதல் போட்டியைத் தொடங்குகிறது.

இதையும் படிங்க: பீஸ்டுகள் சந்திப்பு : 13 ஆண்டுகளுக்கு பிறகும் மாறாத காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.