இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் 2019ஆம் ஆண்டிற்கான தொடரில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், செக் குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவாவை எதிர்கொண்டார்.
-
Power mode activated 💯#Wimbledon | @serenawilliams pic.twitter.com/xs5Ka9DQCW
— Wimbledon (@Wimbledon) July 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Power mode activated 💯#Wimbledon | @serenawilliams pic.twitter.com/xs5Ka9DQCW
— Wimbledon (@Wimbledon) July 11, 2019Power mode activated 💯#Wimbledon | @serenawilliams pic.twitter.com/xs5Ka9DQCW
— Wimbledon (@Wimbledon) July 11, 2019
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றார் செரீனா வில்லியம்ஸ். பின்னர் 6-2 என்ற கணக்கில் இரண்டாவது செட் கணக்கையும் கைப்பற்றிய அவர் பார்போராவைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இவர் தனது 11ஆவது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Semi-final swagger from @Simona_Halep 👌#Wimbledon pic.twitter.com/X2NCkgcUq2
— Wimbledon (@Wimbledon) July 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Semi-final swagger from @Simona_Halep 👌#Wimbledon pic.twitter.com/X2NCkgcUq2
— Wimbledon (@Wimbledon) July 11, 2019Semi-final swagger from @Simona_Halep 👌#Wimbledon pic.twitter.com/X2NCkgcUq2
— Wimbledon (@Wimbledon) July 11, 2019
இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ரோமானியாவின் சிமோனா ஹாலெப், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வென்றார். இதன் மூலம் அவர் முதல் முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வரும் ஞாயிறன்று நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸை, ஹாலெப் எதிர்கொள்கிறார்.