ETV Bharat / sports

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ரத்தாகும் விம்பிள்டன் தொடர்! - Wimbeldon cancels after second world war

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, வரும் ஜூன் மாதம் நடைபெறவிருந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Wimbeldon cancels after second world war
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ரத்தாகும் விம்பிள்டன் தொடர்
author img

By

Published : Apr 5, 2020, 5:18 PM IST

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரிய தொடராகக் கருதப்படுவது விம்பிள்டன் தொடராகும். கடந்த 1877இல் இருந்து லண்டனில் பாரம்பரியமாக இந்தத் தொடர் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஜூலை வரை நடைபெற்றுவருகிறது. கிட்டத்தட்ட டெனிஸ் போட்டிகளில் இது உலகக்கோப்பை தொடராகத்தான் பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், இதன் 134ஆவது தொடர் வரும் ஜூன் 29 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. இதனிடையே உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட் -19 தொற்றால், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விம்பிள்டன் தொடர் பார்வையாளர்கள் இன்றி நடைபெறாது என தொடரின் அமைப்பாளர்கள் கூறியிருந்தனர்.

அதேசமயம், இங்கிலாந்தில் கோவிட்-19 தொற்று வேகமாகப் பரவிவருவதால் இந்தத் தொடர் ரத்து செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்தத் தொடர் நடைபெறுவது குறித்து ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

அதில், வீரர்கள், பொது மக்கள் ஆகியோரின் நலன் கருதி இந்தத் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு முதன்முறையாக விம்பிள்டன் தொடர் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக 1915-1918 வரை முதல் உலகப்போரின் போதும், பின் 1939-1945 வரை இரண்டாம் உலகப்போரின்போதும், இந்தத் தொடர் ரத்துசெய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே கோவிட்-19 தொற்றால் வரும் ஜூலை மாதம் நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்தாண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரும் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதால் விளையாட்டு ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

முன்னதாக, கோவிட்-19 தொற்று காரணமாக வரும் மே மாதம் நடைபெறவிருந்த பிரெஞ்சு ஓபன் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.