கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெஸ்டர்ன் & சவுதர்ன் ஓபன் 2020 டென்னிஸ் தொடர் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவுன் முதல் சுற்று ஆட்டத்தின் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் கனடாவின் டெனிஸ் ஷபோவாலோ இணை, மார்செல் கிரானொல்லர்ஸ் மற்றும் ஹொராசியோ செபாலோஸ் இணையை எதிர்த்து விளையாடியது.
விறுவிறுப்பான இந்தப் போட்டியில் போபண்ணா இணை 4-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் மார்செல் இணையிடம் தொல்வியைத் தழுவியது. இத்தோல்வியின் மூலம் வெஸ்டர்ன் & சவுதர்ன் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியது.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போபண்ணா, ‘கரோனா வைரஸ் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நாங்கள் எந்தவித போட்டியிலும் பங்கேற்கவில்லை. இது உண்மையில் மிக நெருக்கமான ஒரு போட்டியாக இருந்தது.
அதுவும் ஒரு நல்ல அணிக்கு எதிராக விளையாடியதை எண்ணி நான் திருப்தி அடைகிறேன். நாங்கள் ஐந்து மாதங்களுக்கு பிறகு விளையாடினாலும் எங்களது திறனை நேர்மையாக வெளிப்படுத்தினோம்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிபிஎல் 2020: தலவாஸ் அணியை வீழ்த்தி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி!