ETV Bharat / sports

கத்தார் ஓபன்: 13 மாத இடைவேளைக்குப்பின் களமிறங்கும் ஃபெடரர்! - ரோஜர் ஃபெடரர்

காயம், கரோனா ஊரடங்கின் காரணமாக கடந்தாண்டு முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ரோஜர் ஃபெடரர், கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் மீண்டும் களமிறங்குகிறார்.

Watch | Qatar Open: Roger Federer to face Daniel Evans in his comeback match

author img

By

Published : Mar 10, 2021, 7:14 PM IST

சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர். கடந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்குப் பிறகு காயம், கரோனா ஊரடங்கின் காரணமாக கிட்டத்தட்ட 13 மாதங்களாக ஃபெடரர் எந்தவொரு டென்னிஸ் தொடரிலும் பங்கேற்காமல் இருந்துவந்தார்.

இந்நிலையில், கத்தார் நாட்டில் நடைபெற்றுவரும் கத்தார் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மீண்டும் களமிறங்கவுள்ளார். முன்னதாக ரோஜர் ஃபெடரர் கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

பயிற்சியில் ஈடுபட்டுவரும் ரோஜர் ஃபெடரர்

மேலும், இத்தொடரின் இரண்டாம் சுற்றுக்கு நேரடியாகத் தகுதிப்பெற்றுள்ள ஃபெடரர், இங்கிலாந்தின் டான் எவன்ஸுடன் இன்று (மார்ச் 10) பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு ரோஜர் ஃபெடரர் மீண்டும் சர்வதேச டென்னிஸில் களமிறங்கவுள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: சர்வதேச அரங்கில் சாதனை படைத்த மந்தானா !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.