இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக இருப்பவர் சானியா மிர்சா. இவர் 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2018ஆம் ஆண்டு இஷான் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைப் பிறப்பு காரணமாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமலிருந்த சானியா மிர்சா, இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஹாபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை நதியாவுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் முற்றிலும் முடங்கி, விளையாட்டு வீரர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையில் சானியா மிர்சா இன்று தனது சமூக வலைதளப்பக்கத்தில், ‘அனைத்துத் தாய்மார்களுக்கும்’ என்ற உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில், “கர்ப்பம் என்பது எனது வாழ்க்கையில் முதல் முறையாக நான் அனுபவித்த ஒன்று. அதைப் பற்றி நான் அதிகம் யோசித்ததுண்டு. மேலும் நம் அனைவருக்கும் இதைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட படம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் நீங்கள் அதனை அனுபவிக்கும்போதுதான், உங்களுக்கு உண்மையில் அதற்கான பொருள் புரிகிறது. ஏனெனில் அது உங்களை ஒரு மனிதனாக முற்றிலும் மாற்றுகிறது.
கர்ப்பத்திற்குப் பிறகு மீண்டும் உங்களது பழைய வடிவத்திற்கு வருவது ஒரு சவாலாக இருக்கும். இதனை நான் செரீனாவுடனும், மற்ற ஒவ்வொரு பெண்ணுடனும் தொடர்புப்படுத்த முடியும். ஆனால் எல்லா பெண்களுக்கும் இது சாதாரணமானது என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் உங்கள் உடல் கர்ப்பத்திற்குப் பிந்தைய மற்றும் கர்ப்ப காலத்தில் எவ்வாறு செயல்படப் போகிறது என்பது உங்களுக்குத் தெரியாது. அதனால் நீங்கள் அது குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை.
-
. @serenawilliams your story has inspired me to pen this letter. The #BeingSerena documentary echoes my experience and of women worldwide who everyday balance family and personal goals.
— Sania Mirza (@MirzaSania) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
If you are in India, you can catch Being Serena on @DiscoveryPlusIn pic.twitter.com/Xlu9q8vEKb
">. @serenawilliams your story has inspired me to pen this letter. The #BeingSerena documentary echoes my experience and of women worldwide who everyday balance family and personal goals.
— Sania Mirza (@MirzaSania) November 25, 2020
If you are in India, you can catch Being Serena on @DiscoveryPlusIn pic.twitter.com/Xlu9q8vEKb. @serenawilliams your story has inspired me to pen this letter. The #BeingSerena documentary echoes my experience and of women worldwide who everyday balance family and personal goals.
— Sania Mirza (@MirzaSania) November 25, 2020
If you are in India, you can catch Being Serena on @DiscoveryPlusIn pic.twitter.com/Xlu9q8vEKb
நான் தற்போது என்னுடைய கர்ப்ப காலத்தில் சுமர் 23 கிலோ அளவிற்கு உடல் எடை அதிகரிகத்துள்ளது. இதனால் நான் எப்போது மீண்டும் எனது பழைய நிலைக்குத் திரும்பி, டென்னிஸ் விளையாட்டிற்குத் திரும்புவேன் என்று எனக்குத் தெரியவில்லை.
இதற்கு முன்னதாக நான் டென்னிஸ் விளையாட்டிற்குத் திரும்புவதற்காக, கர்ப்ப காலத்திற்குப் பிறகு கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் 26 கிலோ எடையை குறைத்தேன். அதன்பிறகு நான் பங்கேற்ற ஹாபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினேன். ஏனெனில் இவ்விளையாட்டை நான் அவ்வளவு நேசிக்கிறேன். அதனால் இந்த கர்ப்ப காலத்திற்குப் பிறகும் என்னால் உடலளவிலும், மனதளவிலும் மீண்டு வர முடியும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஏடிபி ஃபைனல்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்!