உள்ளரங்கு விளையாட்டுத் தொடரான வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று (அக்.31) நடைபெற்ற முதலாவது அரையிறுதிச் சுற்றில் ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூபெலேவ், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாகச் செயல்பட்டுவந்த ரூபெலேவ் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரூபெலேவ் 4-1 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றில் ஆண்ட்ரே ரூபெலேவ் 6-4, 4-1 என்ற நேர் செட் கணக்கில் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க:இஷான் கிஷனின் அதிரடியில் மும்பை எளிதில் வெற்றி!